குணமாக்கும் வேத மாத்திரை (வசனங்கள்) 2.0: வியாதிகளை விரட்டும் விசுவாச அறிக்கைகள் - Softcover

ஏசுதாஸ் சாலொமோன்

 
9798890674173: குணமாக்கும் வேத மாத்திரை (வசனங்கள்) 2.0: வியாதிகளை விரட்டும் விசுவாச அறிக்கைகள்

Inhaltsangabe

யாத்திராகமம் 15:26-ம் வசனத்தில் தேவன், "நானே உன் பரிகாரி" என்று சொல்கிறார். சங்கீதம் 107:20-ம் வசனத்தில் தேவன், தமது வசனத்தை அனுப்பி நம்மைக் குணமாக்கி, நம்மை அழிவுக்குத் தப்புவிக்கிறார் என்று காண்கிறோம். ஏசாயா 55:11-ம் வசனத்தில் தேவனுடைய வசனமாகிய அவருடைய வார்த்தைகள், அவர் விரும்புகிறதைச் செய்யும், அவர் எந்தக் காரியத்திற்காக அனுப்புகிறாரோ, அதைச் செய்து முடித்துவிட்டுத் தான் திரும்பும் என்று காண்கிறோம். ஏசாயா 53:4-5; மத்தேயு 8:17 வசனங்களில், மெய்யான தெய்வமாகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டார், நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம் என்றும் காண்கிறோம்.இந்த வசனங்களில் இருந்து நாம் கற்றுக்கொள்வது என்ன? தேவனுடைய வார்த்தைகள் அல்லது வசனங்கள், நம்முடைய மனதை மட்டுமல்ல, நம்முடைய சரீர சுகவீனங்களையும், நோய்களையும், பெலவீனங்களையும் கூடக் குணமாக்க வல்லது என்பதுதான்.தேவனுடைய வார்த்தைகளுக்கு ஜீவன் இருக்கிறது, வல்லமை இருக்கிறது. ஆறுதலாகவும், தேறுதலாகவும், கண்டிப்பதாகவும், கட்டளையாகவும் வேலை செய்யும் தேவனுடைய வார்த்தைகள், "மருந்தாகவும்" (அதாவது மாத்திரை யாகவும், ஒளஷதமாகவும்) வேலை செய்கிறது என்பது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை. இயேசு கிறிஸ்துவினால் குணமாக்க முடியாத வியாதி என்று ஒன்று இல்லவே இல்லை. அவருடைய வார்த்தை ஒன்றே போதும்!அத்தனை வியாதிகளும் பறந்தே போகும்!!நீங்கள் இதைப் பயன்படுத்தும் வகையாவது, இயேசு கிறிஸ்துவின் மீதும், தேவனுடைய வார்த்தையாகிய அவருடைய வசனத்தின் மீதும் உறுதியான நம்பிக்கை வைத்து, இவைகளை:1. வாசித்து அல்லது கேட்டு,2. வாயினாலோ அல்லது மனதிற்குள்ளேயோ அறிக்கை செய்து வந்தால் போதும்.மற்றதை இயேசு கிறிஸ்து பார்த்துக்கொள்வார்.

Die Inhaltsangabe kann sich auf eine andere Ausgabe dieses Titels beziehen.